பக்கம்:திரு அம்மானை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 திரு அம்மானை கொண்டேன். அதுவே எல்லாவற்றிற்கும் மேலானது. நானும் என்போன்ற அடியார்களும் அதை அடையும்படி அவன் செய்தான். நாம் மேலே வீடு எய்த. தோழி: அவ்வாறு அந்த வீட்டை எய்துவதற்காக அவன் என்ன செய்தான். 3. - . அவள்: பொன்னுக்கும், பொருளுக்கும், ஆடைக்கும், அணிக்கும், உணவுக்கும், உறையுளுக்கும் ஏங்கிக் கிடக்கும் விருப்பம் ஒழிந்தது. யார் யாரையோ நச்சி அவற்றைப் பெற இரந்து கிற்கும் அவலம் போயிற்று. என்னிடம் இல்லாத பொருளைப் பெறுவதற்காக, அதை உடையவரிடம் சென்று இரந்து, அவருக்கு ஆளாகித் தொண்டு செய்து வாழ்ந்த உலகியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது. இப்போது நானும் அவன் அடியார்களும் ஆர்க்கும் குடியல்லோம். அந்தக் கோமானுக்கே என்றும் மீளா அடிமைகளாகிவிட்டோம். காமா ஆனுேம் அவனே தன் கருணையில்ை, இந்த கிலேயற்ற வீட்டை விட்டு நிலையான வீட்டைப் பெறும்படி எங்களே வந்து ஆண்டு கொண்டான். ஒரு பூதரும் அறியாத் தனி வீட்டில் உரை உணர்வு அற்று இரு, பூதவீட்டில் இராமல் (கந்தர். அலங்காரம்) என்ருன். - r - தோழி: அவனுக்கு ஆளாக்கி உரிமைப் படுத்த யாரை யேனும் அனுப்பினை அவள் அவனே எழுந்தருளி வந்து, காட்டாதன எல் லாம் காட்டி, சிவம் காட்டி, தாள் தாமரை காட்டி, தன் கருணத் தேன்காட்டி, ஆளாகத் தானே கொண்டான். இது எத்தனை வியப்பான செயல் கினைத்தால் மாயம்போல ت*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/66&oldid=894959" இலிருந்து மீள்விக்கப்பட்டது