பக்கம்:திரு அம்மானை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணத்தேன் “, - 53 இருக்கிறதே! அப்படி அவன் ஆளாகக் கொண்டு ஆண்டு கொண்ட திறத்தை எண்ணிப் பாடி அம்மானே ஆடுவோம். ஆள் தான் கொண்டு ஆண்டவா பாடுதும்காண் . அம்மாய்ை இறைவன் திருப்பெருந்துறையில் தம்மை ஆட்கொண்டு இன்பம் தந்து, இனிப் பிறவாமல், மேலான வீட்டை அடையலாம் என்ற உறுதியைத் தந்த பெருங்கருணையை கினேந்து, தம்மைப் பெண்ணுக்கிக் கொண்ட மணிவாசக காயகியார், தோழிக்கு உரைப்பதுபோலப் பாடுகிமுர். கேட்டாயோ தோழி, கிறிசெய்த வாறுஒருவன்? தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் காட்டா தனஎல்லாம் காட்டிச் சிவம்காட்டித் தாள்தா மரைகாட்டித் தன்கருணைத் தேன் காட்டி நாட்டார் நகைசெய்ய, நாம்மேலை வீடுஎய்த, - ஆள்தான் கொண்டு ஆண்டவா பாடுதும்காண் அம்மாய்ை, தோழி, அம்மானே ஆடும் பெண்ணே, ஒப்பற்ற வகிைய இறைவன் மாயம் செய்த விதத்தைக் கேட் டாயோ? சொல்கிறேன் கேள். சுதை திட்டுதலைப் பெற்ற திருமதில் புடை சூழ்ந்ததும், பாண்டிய லுக்குரியதுமாகிய திருப்பெருந்துறையில் கித்தியவாசம் செய்யும் சிவபெருமான், அடியேனுக்கு இதுகாறும் காட் டாத மெய்ஞ்ஞானக் காட்சிகளேயெல்லாம் காட்டி, சிவ பரம்பொருள்ாகிய தன்னையே நான் தரிசிக்கும்படி செய்து, தன்னுடைய திருவடித் தாமரையைக் காட்டி, அதிலிருந்து பொங்கும் கருணை யென்னும் தேனே நுகரச்செய்து, நாட்டில் உள்ளவர்களெல்லாம் அடியார்களாகிய காங்கள் நிலைமாறி யிருப்பதைக் கண்டு நகை செய்யவும், நாங்கள் எல்லாவற்றிற்கும் மேலான வீட்டின்பத்தை அடையவும், அந்தப் பெருமான் தானே எழுந்தருளி வந்து தனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/67&oldid=894961" இலிருந்து மீள்விக்கப்பட்டது