பக்கம்:திரு அம்மானை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 திரு அம்மான அடிமையாகச் செய்து ஆண்டுகொண்ட அற்புதத்தைப் பாடுவோம்." - - - - (கிறி . மாயம்; “கண்டும் கண்டிலேன் என்னகண் மாயமே!"என்று மணிவாசகர் பிற்கோர்டத்தில் சொல்வார். தோழி, ஒருவன் கிறி செய்தவாறு கேட்டாயோ?” என்று கூட்டிப் பொருள் செய்க. தீட்டு திட்டப்பெற்ற சுதை: முதல் கிலே பெயராகிச் செயப்படுபொருளுக் காயிற்று. தென்னன்.பாண்டியன். “காட்டா தனவெல்லாம் காட்டிப் பின்னர்க், கேளா தனவெல்லாம் கேட்பித்து என்னே, மீட் டேயும் பிறவாமல் காத்தாட் கொண்டான், எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே' என்று பிறிதோரிடத்தில் இந்த மாய வித்தையைப்பற்றிச் சொல்லுகிருர் மணி வாசகர். சிவம் காட்டி. சிவமாகிய தன்னைக் காட்டி. தாளைத் தாமரையாக உருவகித்தவர் அ த .ே ைடு இயையக் கருணையைத் தேகை உருவகம் செய்தார். தாமரை காட்டியது கண் காணும்படி, தேன் காட்டி என்பது தேனின் சுவையை நுகரச் செய்து என்று பொருள் கொள்வதற்குரியது. காண்டல், அநுபவத்தில் உணர்வதற்கும் வரும்; ருசி கண்ட பூனே என்ற வழக்காலும் இதை அறியலாம். நாட்டார் - உலகியலிலே காட்டம் கொண்டு அதையே பெரிதென்று பாராட்டும் இயல்புடைய நாட்டில் உள்ள மக்கள். நகை செய்ய 'இவள் இருந்தவாறு என்னே' என்று பரிகசித்துச் சிரிக்க, "சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப" (போற்றித் திருவகவல், 68 } என்றும், "உலகமெல்லாம், சிரிக்கும் திறம்பாடித் தெள்ளேணம் கொட்டாமோ" (திருத்தெள்ளேணம், 3) என்றும் பிற இடங்களிலும் சொல்வார். மேலே: ஐ, சாரியை. மேலான வீடு என்றது முத்தியை. விடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/68&oldid=894963" இலிருந்து மீள்விக்கப்பட்டது