பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 மு. பரமசிவம் :

விக்:

அவங்களை பார்த்ததும் நான் பயந்து போய் ஒரு பள்ளத்திலே பதுங்கிக்கிட்டேன். அருவிப் பாதையிலே எறங்கி அவுங்க ரொம்ப தூரம் போனப்புறம் மேலே வந்து ஆன மட்டும் தேடிப் பார்த்தேன். அந்தக் கோயிலையும் என்னாலே கண்டுபிடிக்க முடியலே. மகாராணியையும் என்னாலே கண்டுபிடிக்க முடியலே. சரி... சிவனடியாரைப் பார்த்து சொல்லலாம்னு அங்கிருந்து வந்தா இங்கே நீங்க வெள்ளத்திலே சிக்கிக்கிட்டு இருந்தீங்க... அந்த மட்டும் நான் வந்த சமயம் நல்ல சமயந்தான். இல்லையா மகாராஜா? அதிருக்கட்டும், பொன்னா, மகாராணி அந்த மலையில்தான் இருக்கிறார் என்ற நம்பிக்கை உனக்கு இருக்கிறதா? அதே சமயத்தில் யாரோ இருவர் அந்தப் பக்கமாக வரும் காலடி ஓசை கேட்க, விக்கிரமனின் வாயைப் பொத்துகிறான் பொன்னன். சாளரத்தின் ஓரமாகச் சென்று பார்க்க, அப்போது பளி என்று ஒரு மின்னல் மின்ன, அந்த மின்னல் வெளிச்சத்தில் மாரப்ப பூபதியும், கபால ருத்ரபைரவனும் வருவது தெரிந்து மறுபடியும் ஓடி வருகிறான்.

பொன். மகாராஜா. ஆபத்து வந்திருக்கு... எதுக்கும்

விக்:

தயாரா இருங்க மகாராஜா...

(இடுப்பைத் தடவிப் பார்த்தபடி)