பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

奪

116 மு. பரமசிவம் :

விக்கிரமன் நாடு திரும்ப முடிவு செய்து அதைப்

பொன்னனிடமும் கூறுகிறான்.

விக்: ஆ. பொன்னா... கொஞ்ச நேரத்துக்கு முன்னால் என் உள்ளத்தில் காதலும் வீரமும் போட்டியிட்டன. அந்தப் போட்டியில் காதல் வென்று விடுமோ என்று நான் அஞ்சினேன். அதற்கு இப்போது அவசியமில்லாமல் செய்துவிட்டது இந்தக் கத்தி. என் தந்தை எனக்களித்து விட்டுச் சென்ற இந்தத் தமிழ் மறை என்ன சொல்கிறது. முயற்சி திருவினையாக்கும் என்றல்லவா சொல்கிறது? அந்த முயற்சியை நானாவது கைவிடவாவது? வா பொன்னா போகலாம்.

(படகை அங்கே காணோம்)

இதென்ன? பொன்னா இது... படகைக் காணோமே... நீந்தியே போய்விடுவோமா?

பொன் வேண்டாம் வேண்டாம். இங்கதான் எங்கேயாவது கரையோரம் போயிருக்கும். இருங்க, ஒடிப்போய் பார்த்துட்டு வந்துடறேன்.

குந்தவி வந்து விக்கிரமனின் கையிலிருந்த பெட்டியை வாங்கி ஒரு பக்கமாக வைத்துவிட்டுப் பேசுகிறாள்.

குந்: சோழ நாட்டாரின் யோக்யதை இதுதானா? வள்ளுவர் பெருமான் முயற்சி திருவினை யாக்கும் என்று மட்டும் தானா சொல்லி யிருக்கிறார்? நன்றி மறப்பது நன்றன்று என்றும் சொல்லியிருப்பதாக எனக்குக் கேள்வியாயிற்றே!