பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 மு. பரமசிவம் *

&

குந்:

சொல்ல வேண்டுமா? ஒரு தடவை அந்தத் தவறைச் செய்தேன். இனிச் செய்யமாட்டேன். இவர் தமது கையில் பிடித்த வாளின் வலிமையினால், ஒரு சாண் பூமியை வென்று ராஜாவானால் அந்தச் சாண் பூமிக்கு நான் ராணியாயிருப்பேன். உன்னைப் போல் இவர் படகோட்டிப் பிழைத்து, ஒரு குடிசையில் என்னை வைத்தால், உன் மனை வள்ளியைப் பால் நானும் இந்தக் குடிசையில் ராணியா யிருப்பேன்.

இவரை மன்னிக்கும்படியோ, இவருக்கு சோழ ராஜ்யத்தைக் கொடுக்கும்படியோ சக்கரவர்த்தியை ஒருநாளும் கேட்கமாட்டேன். எனக்காக வேண்டுமானால் என் தந்தையிடம் நான் பிச்சைக் கேட்பேன். இவருக்காக எதுவும் கேட்டு இவருடைய வீரத்துக்கு மாசு கற்பிக்க மாட்டேன்.

அப்போது மாரப்பன் அங்கு வந்து விக்கிரமனை கைதாக்கிச் செல்கிறான். பொன்னனை அழைக்கிறாள் குந்தவி. பொன்னா... நீ உடனே போய் வள்ளியை அழைத்துக் கொண்டு இங்கே வா. நமக்கு அதிகமான வேலையிருக்கிறது. உங்கள் மகாராஜாவை எப்படியாவது விடுதலை செய்யவேண்டும். யாருக்கும் தெரியாமல் அவரை மாமல்லபுரத்துக்கு அனுப்ப வேண்டும். இந்த அமாவாசையன்று செண்பகத் தீவுக்குச் செல்லும் கப்பலில் அவரை ஏற்றிய பிறகு தான் நமக்கு நிம்மதி.