பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 மு. பரமசிவம் :

குந்:

நர:

குந்:

நர:

குந்:

நர:

மகா கபால பைரவன்தான் ஒளித்து வைத்திருந்தான். ஐயோ!

அதுமட்டுமா? ராணியைக் காப்பாற்றப் போன சிவனடியாரை வேறு அவன் தீர்த்துக் கட்டப் பார்த்தானாம். கழுத்தில் கத்தி விழப்போகும் சமயத்தில் ரத்தின வியாபாரி வந்து அவரைக் காப்பாற்றினானாம்.

அதிசயமா யிருக்கிறதே!

இது என்ன அதிசயம்? இன்னொரு அதிசயத்தைக் கேள். இந்த ரத்தின வியாபாரி யார் தெரியுமா? என்னால் தேசப்பிரஷ்டம் செய்யப்பட்ட சோழநாட்டு ராஜகுமாரன். அவன் தாயாரையும் தாய்நாட்டையும் பார்ப்பதற்காக அம்மாதிரி வேஷம் போட்டுக் கொண்டு வந்தானாம். என்ன தைரியம்? என்ன துணிச்சல்? அதிருக்கட்டும் அப்பா, அவர்கள் எல்லாரும் இப்போது எங்கே இருக்கிறார்கள்?

இருக்க வேண்டிய இடத்தில்தான். விக்கிரமன் இன்னா ணென்பதைக் கண்டுபிடித்தவன் மாரப்ப பூபதி. அவனை விசாரணைக்காக காஞ்சிக்கு அனுப்பும்படி உன் தமையன் கட்டளை அனுப்பியிருந்தான்... நான் அதை மாற்றி உறையூருக்கே அவர்களைக் கொண்டு போகச் சொல்லியிருக்கிறேன்... நானே நேரில் வந்து விசாரணை நடத்துவதாகத் தெரிவித்