பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*_திரையுலகில் விந்தன் 157

அப்படியே, திரும்பத் திரும்ப பாடிக் கொண்டி ருந்தார்கள்.

அத்தனையும் இன்று வரும் சினிமாப் படங்களில் படைக்கப்படுவது போல் எளிய சந்தங்களில் அமைக்கப்பட்டவையா? இந்துஸ்தானி மெட்டுகளில் பாடப்பட்டவையா? இல்லை; சுருதி சுத்தமான கர்நாடக இசையில் அமைக்கப்பட்டவை! பாடப்

LIL-L-60)6)].

பாகவதரால் அவற்றை எப்படி அவ்வளவு இனிமையாக, அவ்வளவு எழிலாகப் பாட முடிந்தது? படித்தவர்களால் மட்டும் அல்ல பாமரர்களாலும் அவற்றை எப்படி அவ்வளவு சுத்தமாகப் பின்பற்றி இசைக்க முடிந்தது?

அதை வெறும் அதிசயம் என்றால், சொன்னால் போதாது; அதிசயத்திலும் அதிசயம் என்றே சொல்லவேண்டும்.

ஆம்: இந்துஸ்தானி இசையை மட்டுமல்ல, கர்நாடக இசையையும் பாடுவது போலப் பாடினால் அதை எல்லோரும் பாட முடியும், அனுபவிக்க முடியும் என்னும் உண்மையைப் பொறாமை மிகுந்த இந்த உலகத்துக்கு முதன் முதலில் புன்னகையுடன் எடுத்து காட்டிய பெருமை பாகவதரையே சேரும். இதைச் சிலர் மறுக்கலாம்; ஆனால் மறைக்க முடியாது.

அதோ காரில் போகிறாரே; அவர் தமக்குப் பக்கத்தில் 'உம்'மென்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் தம்முடைய இளம் மனைவியைக் கடைக் கண்ணால் பார்த்துச் சிரித்துக்