பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 மு. பரமசிவம் :

கேக்கை வெட்டி, ஒரு துண்டைத் தான் வாயில் போட்டுக் கொண்டு மற்ற துண்டுகளை ஏற்றத்தாழ்வு பார்க்காமல் அவன் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்கிறான். ஏன்? தன்னை வந்து அடைந்துள்ள புகழ், பொருள் அனைத்தையும் பிறருடன் பகிர்ந்து கொள்ளத் தயாராயிருப்பதை எடுத்துக் காட்டு வதற்காக. இதுவே கேக் வெட்டுவதன் தாத்பர்யம். இதை விட்டுவிட்டுப் பிரஸ் ரிப்போர்ட்டரைக் கூப்பிட்டு பர்த்டே கொண்டாடறவன் உண்மையான கலைஞன் அல்ல. அசல் வியாபாரி. அப்படித்தான் என்னால் சொல்லமுடியும்!

பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்காமல் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து நடிகனாக, கார் டிரைவராக, மெக்கானிக்காக, எலக்டிரீஷியனாக வளர்ந்த எம்.ஆர். ராதாவைப் பல தொழிலதிபர்கள் பாராட்டி யிருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் திரு. டி. வி. சுந்தரம் அய்யங்கார் அவர்கள். இதோ ஒரு நிகழ்ச்சி!

டி.வி. சுந்தரம் அய்யங்கார்கூட ஒருமுறை உங்கள் மெக்கானிசத்தைப் பார்த்து..?

"அதுவா? ... அதைச் சொல்லுவதற்கு முந்தி அவருக்கும் எனக்கும் எப்படித் தொடர்பு ஏற்பட்டது என்பதை நான் சொல்லணும். மதுரையிலே ஜகந்நாதய்யர் கம்பெனி முகாம் போட்டிருந்த சமயம்