பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

©

176 மு. பரமசிவம் :

செயற்கைப் பணம் ஒருவனை ஏய்த்து

செல்லாக் காசா ஆக்குது விதியை நம்பி எத்தனை நாள்

வீணாக் காலம் கழிப்பது? வீணர் வாழ எத்தனை நாள் வீரங்குன்றி வாழ்வது?

பாடுபடும் பாட்டாளி பசியாலே துடிக்கிறான் பசியைப் பணமாக்கி முதலாளி பதுக்கிறான்

சாலையிலே தொழிலாளி சம்சாரம் நடக்குது ஆலையிலே அவனாவி புகையாகப் போகுது

கடலைப்போல உலகமெல்லாம் கஷ்டப்படும் கூட்டம்! கப்பல் போல முதலாளி போடுகிறான் ஆட்டம்! கொந்தளித்துக் கடலெழுந்தால் கப்பல் கதி என்ன? கொடுமைக்கெல்லாம் இன்றே ஒர்

எல்லையிட்டால் என்ன? (ஒண்ணும்)