பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 35

3

செங்கற்பட்டு மாவட்டம் நாவலூர் என்னும் சிற்றுாரில் வேதாசலம் - ஜானகியம்மாள் தம்பதிகளின் மூத்த மகனாக 22.9.1916இல் பிறந்தார் கோவிந்தன். கோவிந்தன் பிறந்தது சிற்றுர். எனினும், அவன் ஓடி விளையாடி வளர்ந்த இடம், துப்பாக்கிச் சூடுகள், போராட்டங்கள் நிகழ்ந்த பக்கிங்ஹாம் பஞ்சாலை அமைந்துள்ள சூளை - பட்டாளப் பகுதி.

வீரம் செறிந்த அந்த மண்ணில் வளர்ந்தவர். வறுமையின் கொடுமையால் படிப்பைப் பாதியிலே நிறுத்தினார். பின்னர் ஓவியக்கல்லூரியில் சேர்ந்துப் படிக்க ஆரம்பித்தார். அப்பொழுது கோவிந்தனின் பாட்டனார் படைப்புத் தொழில் தரித்திரமானது என்று அந்த முயற்சியை முளையிலேயே கிள்ளியெறிந்தார்.

அப்படியும் இப்படியுமாகக் கோவிந்தனுக்கு இருபது வயது ஆனது. அச்சமயத்தில் சில நாட்கள் ஜெமினி ஸ்டுடியோவில் விளம்பரத்துறையில் வேலை பார்த்தார். அதே காலத்தில் நண்பர் இராஜாபாதர் உதவியால் டாக்டர் மாசிலாமணி முதலியார் நடத்திய 'தமிழரசு பத்திரிகையில் அச்சகப்பிரிவில் சேர்ந்தார்.

'தமிழரசு’ பத்திரிகையின் ஆஸ்தான கவிஞராக

விளங்கிய பாரதிதாசன் எழுதிய தமிழுக்கு அமுதென்று பேர் என்னும் கவிதையை முதன்முதலாக அச்சுக்