பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மு. பரமசிவம் *

கோத்த பெருமை பிற்காலத்தில் கதாசிரியராக கவிஞராகப் புகழ் பெற்ற (கோ)விந்தன் அவ களுக்கே உரியது.

தமிழரசு, ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகளில் அச்சுக் கோப்பாளராக இருந்த கோவிந்தன் 1941ஆம் ஆண்டு கல்கி பத்திரிகையில் நண்பர் இராஜாபாதர் உதவியுடன் சேர்ந்தார்.

பேராசிரியர் கல்கி அவர்களின் கையெழுத்து கடவுளுக்குத்தான் புரியும் என்று எல்லோரும் கருதிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்தக் கையெழுத்து விந்தனுக்கு எளிதில் புரிந்தது!

கல்கி தீபாவளி மலர் ஒன்றுக்குக் கல்கி எழுதிய 'வீணை பவானி என்ற நீண்ட சிறுகதையைச் சிறிதும் பிழையின்றித் திருத்தமாக அச்சுக் கோத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் கோவிந்தன்.

இந்தச் செய்தி பேராசிரியர் கல்கியின் காதில் விழுந்தது. 'யார் அந்த ஆள்?' என்று போர்மேன் இராஜாபாதரிடம் கேட்க, இராஜாபாதர் 'இந்தப் பையன்தான் சார்!" என்று கோவிந்தனைக் கல்கியின் முன் அழைத்துவந்து நிறுத்தி, இந்தப் பையன் நல்லா கதையெல்லாம் எழுதுவான் சார் என்று உற்சாகத் தோடு தன் நண்பனை - ஒரு படைப்பாளியை அறிமுகப்படுத்தினார். அப்படியா, பேஷ்! ஒரு கதை எழுதி கொண்டு வரச் சொல்லு என்றார் கல்கி.