பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 45

A.

1951இல் ' பிரபல எழுத்தாளர் விந்தன் ஏவி.எம். கதை இலாகாவில் சேர்ந்தார்!" என்ற செய்தி தினத்தந்தி பத்திரிகையில் வெளிவந்தது.

ஏவி.மெய்யப்பனின் நெருங்கிய உறவினர் ஒருவர் விந்தனுக்குப் பலவிதமான ஆசைகளைக் காட்டி, சினிமாத்துறைக்கு அழைத்துப் போனார்.

அக்கால கட்டத்தில் ஏவி.எம்.கதை இலாகாவில் அன்றைய புகழ்பெற்ற எழுத்தாளர் ப.நீலகண்டன் அவர்களே கதை இலாகாவின் பொறுப்பாளராக இருந்தார். அச்சமயத்தில் ஏவி.எம்.நிறுவனம் 'வேலைக்காரன்' என்ற பெயரில் படம் ஒன்றைத் தயாரிக்கப் பலரைக் கொண்டு கதையை உருவாக்கிக் கொண்டிருந்தது.

உழைக்கும் வர்க்கத்தில் இருந்து வந்த எழுத்தாளரான விந்தனுக்கு வேலைக்காரன் என்னும் தலைப்பு மிகவும் பிடித்திருந்ததால் மனநிறைவோடு கதை இலாகாவில் சேர்ந்து பணியாற்றினார்.

ஆனால் கதை இலாகாவில் விந்தன் கதைக்கும் கருத்துக்கும் மதிப்பும் மரியாதையும் இல்லை என்பதை அறிந்து, அனுபவத்தால் அறிந்து விலகி விட நினைத்த நேரத்தில் அவரின் 'பாலும் பாவையும்' நாவலை ஏவி.எம். நிறுவனம் படமாக்க விரும்பியது.