பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மு. பரமசிவம் :

ஏட்டிலே நடமாடும் சட்டம், நாட்டிலே நடமாடாத காரணத்தால், காதல் ஒன்று சேர்த்து வைக்காத கீதாவையும், ராஜாவையும் கெளரவம் ஒன்று சேர்த்து வைத்தது. அதற்கு அவர்கள் பெற்றோர்கள் இட்ட பெயர் - கல்யாணமாம் கல்யாணம்.

அதனால் விளையும் . விபரீதங்களைத்தானே 'விதியின் விளையாட்டு' என்று வீண்ர்கள் சொல்கிறார்கள்.

பாவம், கல்யாணம் பண்ணியும் கன்னியாக, கணவன் உயிருடன் இருந்தும் கைம்பெண்ணாகக் காலம் கழித்து வந்தாள் கீதா.

தன்னலம் மிக்க ஆண்களால் இயற்றப்பட்ட சட்டதிட்டங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள் அவளுக்கு அநீதிமேல் அநீதி இழைத்து வந்தன. அவற்றுக் கிடையே நீதியை விலை கொடுத்து வாங்கமுடியாத கீதா கண்ணி விட்டாள்; கலங்கினாள்.

இந்த நிலையில், கடன் கொடுத்த கயவன் ஒருவன் தயாநிதி என்று தகாத பெயரில் வந்து, அவளிடம் காதல் கீதம் பாடினான். அக்கம் பக்கத்தி லிருந்தவர்கள் அவன் பாட்டுக்குப் பக்க வாத்தியம் வாசித்தனர்! இந்த அபஸ்வரத்தைக் கேட்டுக் கீதா துடித்தாள்; துவண்டாள்.

அவள் தகப்பனார் சதாசிவம் அதற்கு மேல் பொறுமையைச் சோதிக்க விரும்பவில்லை. ராஜாவின் அப்பாவான பொன்னுசாமியைத் தேடிச் சென்றார். விஷயத்தை எடுத்துச் சொல்லி அந்த வீணன் காலில்