பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 65

காதல் செய்த குற்றம் எனது

கண்கள் செய்த குற்றமானால்

கண்ணைப் படைத்த கடவுள் செய்கை

சரியா? தப்பா?

இரண்டாவது பாடல் வரிகள் :

பார் என் மகளே பார்! பார்!

பரந்து கிடக்கும் அன்னை பூமி

பரிந்துன்னை அழைக்குது

பார்! பார்! பார்!

இருந்த வீடு இரவல் வீடு

இருக்கப்போவது சொந்தவீடு

வருந்தவேண்டாம்! உருளும் உலகில்

இருளும் ஒளியும் இயற்கை! என்றவாறு பாடல் கருத்தோட்டத்துடன் தொடருகிறது.

அன்றைய திரை உலகில்,

'ஜாலிலோ ஜிம்கானா, டோலிலோ கும்கானா என்னும் பாடல் வரிகள் சினிமா ரசிகர்களின் காதுகளில் நாராசம் போல் ஒலித்துக் கொண்டிருந்தது. அக்காலகட்டத்தில் முற்போக்குச் சிந்தனையாளரான விந்தன், படிப்பாளியும் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில் பாடல்களை எழுதினார்.