பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 67

விசாலமான உள்ளம் படைத்த லேனா செட்டியார் பிறருக்கு உதவி செய்வதிலேயே நோக்கமாக இருந்தவர்; மானம் மரியாதைகளைப் பற்றிக் கவலைப்படாமல் நடிகை - நடிகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் போஷகராக இருந்தவர். ஒரு முறை உடுமலை நாராயணகவி அவர்கள் லேனாவை பற்றிச் சொல்ல வந்தபோது லேனா கொடுத்த பேனா! என்று புகழ் பாடினார்.

இவ்வாறு சினிமா உலகில் பலருக்கு நண்பராக இருந்தவர் "தெருவிளக்கு'த் தொடர் தாம் சம்பந்தப்பட்ட கதை என்று விந்தனை நேரில் அழைத்து, மிரட்டினார். எழுத்தைப் பொறுத்த வரையில் எவருக்கும் அஞ்சாத விந்தன், 'லேனா மிரட்டலைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் "தெருவிளக்குத் தொடரைத் தொடர்ந்து வெளியிட்டார். மனிதன் நின்று விட்டதால் அத்துடன் தெருவிளக்கும் அணைந்து போயிற்று.

'மனிதன் மறைவு விந்தனுக்கு நேர்ந்த பெரிய இழப்பு. இலக்கிய உலகிற்கு ஏற்பட்ட மகத்தான சோதனை. மனிதனின் இழப்பைக் குறித்து விந்தன் கூறுகிறார் :

சுதந்திர எழுத்தாளனாகச் சுடர்விட முயன்ற என்னை என் சுயமரியாதை உணர்வுகள் தடுத்ததால் சொந்தமாக ஒரு பத்திரிகையே நடத்திப் பார்த்து விடுவோமே என்று 1954 ஆகஸ்டில் மனிதனை ஆரம்பித்தோம், அதற்கு மக்கள் ஆதரவு அமோகமாக இருந்தும் விற்பனையாளர்கள் செய்த சத்திய சோதனையாலும் அந்தச் சத்தியசோதனையிலிருந்து