உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மு. பரமசிவம் :

1O

1958இல் ஜனதா பிக்சர்ஸ் மணமாலை என்ற

படத்தைத் தயாரித்தது. மூலக்கதை சரத் சந்திரர்; இயக்கம் சி.எச்.நாராயணமூர்த்தி, வசனம் விந்தன்.

இதுதான் கதை : பழனியில் ஏழை சுப்பிரமணிய முதலியார் மனைவியிழந்தவர். திடீரென்று அவர் இறந்துவிட நிராதரவான அவர் மகள் லலிதாவைத் தாய்மாமன் குருசாமி முதலியார் சென்னைக்கு அழைத்துச் செல்லுகிறார்.

அவருடைய பக்கத்துவீட்டுப் பணக்கார சுகானந்த முதலியார் இளையமகன் சேகரிடம் லலிதா ஒய்வு நேரத்தில் கல்விகற்று வருகிறாள். சேகரும் அவன் தாய் மீனாட்சியும் லலிதாவுக்கு ஆதரவு தருகின்றனர். மங்கைப் பருவம் அடைந்த லலிதா, சேகரிடம் பயத்துடனும் மரியாதையுடனும் உறவாடுகிறாள்.

குருசாமி முதலியார் தன்வீட்டை சுகானந்த முதலியாரிடம் அடகு வைக்க, கடனை திருப்பித் தராததால் அவரைக் கொடுமைப்படுத்துகிறார்.

எதிர்வீட்டு மாசிலாமணியின் மனைவி மனோரமாவும் அவள் மகள் ராதாவும் லலிதாவின்