பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மு, பரமசிவம் &

பொறாமையும் கொண்ட சுகானந்த முதலியார் பல வகையிலும் குருசாமி முதலியாருக்கு இன்னல்கள் செய்வதுடன் அவரைச் சாதிப் பிரஷ்டமும் செய்கிறார். இவர்கள் இரு வீடுகளுக்குமிடையே இருந்த வழியும் அடைக்கப்படுகிறது.

குமார், குருசாமி முதலியாரையும், குடும்பத்தி னரையும் ஊட்டிக்கு அழைத்துச் செல்லுகிறான். உடைந்த உள்ளத்துடன் லலிதாவும் ஊட்டிக்குச் செல்லுகிறாள். ஊர் திரும்பிய சேகர், லலிதா தனக்குத் துரோகமிழைத்துவிட்டதாக எண்ணி வருந்துகிறான். இடையில் சுகானந்த முதலியார் காலமாகிறார். ஊட்டியில் குருசாமி முதலியார் உடல்நிலையும் மோசமாக, அவர் இறப்பதற்கு முன் குமார் லலிதாவை தான் மணந்து குருசாமி முதலியாரின் குடும்பத்தைக் காப்பாற்றுவதாக உறுதியளிக்கிறான் ,

குருசாமிக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி லலிதாவை மணக்க எண்ணிய குமாரிடம் லலிதா, அந்தத் திருமணத்திற்கு தான் ஒப்ப முடியாதென்றும், தான் முன்னரே மணமானவள் என்றும் தன் கணவன் தன்னை அழைத்துச் செல்லும்வரையில் காத்திருக்க வேண்டியவள் என்றும் உறுதியாகக் கூறுகிறாள். தன் கணவன் யார் என்பதையும் கூற மறுக்கிறாள். இதனால் மனம் உடைந்த குமார் கடைசி நேரத்தில் மாலதியை மணந்து கொள்ளுகிறான்.

சென்னையிலிருக்கும் சேகர், லலிதாவுக்கும் குமாருக்கும் திருமணம் என்று தாய் மூலம் கேள்வியுற்று மனம் வருந்துகிறான். தன் தாயின் விருப்பப்படியே வேறொரு பெண்ணை மணம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறான். திருமணத்திற்கு