பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ふ திரையுலகில் விந்தன் 79

நாளும் குறிக்கப்படுகிறது. திருமணப்பத்திரிகையைக் கண்ட குமார் லலிதாவுடனும் மாலதியுடனும் சென்னைக்கு வருகிறான். மணக் கோலத்துடன் சேகரைக் கலங்கிய கண்களுடன் லலிதா.சந்திக்கிறாள்.

பின்பு...?

இக்கதை ஏறக்குறைய வாழப்பிறந்தவள் கதை போல் இல்லை? இரண்டும் வேற்றுமொழிக் கதைகள். எனினும் தமிழ்நாட்டுக் குடும்பங்களில் நடை பெறும் நிகழ்ச்சிகளைக் கொண்டது. இக் கதைக்கு வழக்கம் போல் சிறப்பாக வசனம் எழுதி யிருந்தார் விந்தன். ஜெமினி கணேசனும் சாவித்திரியும் இணைந்து நடித்தனர். எனினும் படம் வெற்றி பெறவில்லை.

大 大 大

பேராசிரியர் கல்கி எழுதிய பார்த்திபன் கனவு நாவலை அக்காலத்தில் படிக்காத இளைஞர்களே இல்லையென்று சொல்லலாம். ஏன் இலக்கியவாதிகள் கூட அந்நாவலை விழுந்து விழுந்து படித்தார்கள் என்றால் மிகையாகாது.

அப்படிப் படித்த, இளைஞரான கோவிந்தராசன், 'ஜூபிலி பிக்சர்ஸ்' என்ற சினிமா கம்பெனியை ஆரம்பித்து கல்கிக்கு நெருக்கமாக இருந்த விந்தன், மணியம் ஆகியோரைக் கொண்டு கல்கியின் 'பார்த்திபன் கனவு நாவலைப் பிரமாண்டமான முறையில் அதிகப் பணச்செலவில் திரைக் காவியமாகப் படைக்கக் கனவு கண்டார்.