பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鲈

  • திரையுலகில் விந்தன் 81

பேராசிரியர் கல்கி அனைவரின் மனத்திலும் சிலையாக அமைந்து விட்டார் என்றே நம்பலாம்!

இதுதான் கதை :

தமிழ் இலக்கிய உலகில் ஒரு மாபெரும் மறுமலர்ச்சியை எழுப்பி இலக்கிய உலகிலே பல சாதனைகளைப் புரிந்தவர் கல்கி அவர்கள். அவரது பேனாவிலே வடித்த பார்த்திபன் கனவு தமிழரின் வீரம், பண்பு, கலாசாரம் இவற்றின் பிரதிபலிப்பாக அமைந் திருக்கிறது. எழுத்துக்கு எழுத்து கதாசிரியரின் கருத்தைப் பின்பற்றி இப்படம் எடுக்கப்பட்டி ருக்கிறது.

இது ஒரு திரைக்காவியமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வள்ளுவரின் குறளையும் கரிகாலச் சக்கரவர்த்தியின் வாளையும்தான் விக்கிரமனுக்குச் செல்வமாக விட்டுச் சென்றான்.

பல்லவப் பேரரசின் அடிமைத்தளையிலிருந்து சோழநாடு விடுபட்டு மகோன்னதமாக விளங்க வேண்டும் என்று கனவு கண்டான் பார்த்திப மகாராஜா (அசோகன்).

நாட்டுப் பற்றைச் சுயநலத்திற்கு இரையாக்கி விட்டு தன்னை வளர்த்த சோழ நாட்டுக்கே துரோகியாகி தன் தீவினையால் மடிந்தான் மாரப்பன் (பாலையா)

தி.வி. - 6