பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 மு. பரமசிவம் :

ஒவ்வொரு மூச்சிலும் சோழநாட்டின் நலனையே பேணித் தன் உயிரையும் மதிக்காமல் உழைத்த ராஜ விசுவாசி படகோட்டி பொன்னன். (எஸ்.வி.சுப்பையா)

யார் இந்தச் சிவனடியார்? என்ற கேள்வியை ஒவ்வொருவரிடமும் எழுப்பிவிட்டுத்தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய இணையற்ற கோமான். (ரங்காராவ்)

ஒற்றனாக வந்து விக்கிரமனைக் காப்பாற்றிய தன் தந்தையின் செயல் குறித்து மகிழும் குந்தவி, தன் சகோதரனின் ஆணைப்படி சதிகாரன் மாரப்பனிடம் விக்கிரமனை ஒப்படைக்கும்போது வருந்துகிறாள். கபால பைரவர் மாரப்பன் சூழ்ச்சி வெளியாகி சிவனடியார் யார் என்பதும் தெரிகிறது.

大 女 ★

இந்தப் படத்துக்கு விந்தன் எழுதிய

வசனங்களில் சில பகுதிகள்:

- ராஜவிசுவாசிகள்

சோழ நாட்டின் தேசபக்தச் சிகாமணிகளுள் குறிப்பிடத்தக்கவன் பொன்னன். அவன் ராஜகுலத் தோரின் படகோட்டி அவன் மனைவி வள்ளி. அவள் ரொம்பவும் துடுக்குக்காரி. ஆனால் அவ்வளவும் வெள்ளையுள்ளம் கொண்டவள்.

பொன்னன் காவிரியில் படகை நிறுத்திப் படிக் கரையேறித் தன் குடிசைக்குள் நுழைகிறான்.