பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 மு. பரமசிவம் :

வீரபத்திர ஆசாரியின் பேத்திதான் வள்ளி. அவர் ஒரு வீரர். ஜோசியர் வள்ளியை அங்கே விட்டுவிட்டுப் பார்த்திப மகாராஜாவைப் பேட்டி காணச் செல்கிறான் பொன்னன். பதவியிழந்த மாரப்பபூபதி ஜோசியம் கேட்க வீரபத்திரரிடம் வருகிறான். சண்டையில் ஒரு பக்கத்துச் சைனியம் அழியும் என்கிறார் அவர். மகிழ்கிறான் அவன்.

பார்த்திபன் வேண்டுகோள்:

நானும் காலம் வரும்போது சொல்கிறேன். காலம் வரும்போது சொல்கிறேன் என்று சொல்லி வந்திருக்கிறேன். சொல்லவேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது.

சோழ வம்சத்தின் புராதன பொக்கிஷம் இந்தப் பெட்டிக்குள்ளே இருக்கிறது. இதோ பார்... சோழரின் வீரம் உறங்கியது போல் உறங்கி விட்ட இந்த உடைவாளைப் பார்த்தாயா? எங்கள் கரிகால் வளவனும் நெடுமடிக் கிள்ளியும் இந்த உடைவாளைத் தரித்துத் தான் உலகத்தையே ஆண்டார்கள். அருள் மொழி, உலகத்தையே ஆண்டார்கள். ஒலைச் சுவடியில் உள்ளது தெய்வப்புலவர் அருளிய திருக்குறள். இவற்றை நீ காப்பாற்றி விக்கிரமனுக்கு வயது வரும்போது கொடுக்க வேண்டும் அருள்மொழி. இந்த உடைவாளை என் தகப்பனார் அணிந்திருந்தார். நான் அணிய வில்லை. ஏன் தெரியுமா?