பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

事

  • திரையுலகில் விந்தன் 89

زGl/9ئے

பார் :

கப்பம் கட்டும் சிற்றரசனாக இருந்துகொண்டு கரிகால் வளவனும் நெடுங்கிள்ளியும் அணிந்த உடைவாளை நான் அணிய விரும்பவில்லை. இதையும் நீ விக்கிரமனிடம் சொல்ல வேண்டும்.

எப்போது அவன் ஒரு சின்னஞ்சிறு பிரதேசத்துக்காவது சுதந்திர மன்னனா கின்றானோ அப்போதுதான் இந்த உடை வாளைத் தரிக்கலாம். அதுவரை தரிக்கக் கூடாது என்று நீ அவனிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அதை அப்படியே ஏற்றுக் கொண்டு அந்தச் சொல்லைச் செயலாக்கும் சுத்த வீரனாக அவனை நான் வளர்க்கிறேன் என்று நீ இந்தத் தெய்வ சந்நிதானத்தில் எனக்கு வாக்குறுதி அளிக்கவேண்டும். செய்வாயா? அருள்மொழி, செய்வாயா?

அப்படியே செய்கிறேன் சுவாமி.

அதற்கு வேண்டிய தைரியத்தை பகவான் உனக்கு அளிக்கட்டும். காதலால் வீரத்தை வளர்க்கவேண்டுமே தவிர, கண்ணிரால் அதை அழித்துவிடக் கூடாது. அருள்மொழி. உன் பிள்ளைக்கு என்னால் சாம்ராஜ்யப் பட்டாபிஷேகம் செய்து வைக்க முடியாமற் போகலாம். ஆனால் வீரத் தந்தையின் புதல்வன் என்ற பட்டத்தை நிச்சயம் அளிப்பேன்... தேவி, நிச்ச்யம் அளிப்பேன். நான் வருகிறேன் தேவி!