பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. மு. பரமசிவம் *

விக் :

பார்:

அந்த ஆசை நிறைவேற வேண்டுமானால் சோழ நாட்டின் உன்னதமே உன் வாழ்க்கையின் நோக்கமாயிருக்க வேண்டும். சோழரின் புலிக்கொடி வேறு எந்த நாட்டின் கெ.டிக்கும் தாழாமல் வானளாவிப் பறக்க வேண்டு மென்று நீ சதா காலமும் சிந்திக்க வேண்டும்.

நாளை மறுதினம் நான் போருக்குக் கிளம்புகிறேன். யுத்த களத்திலிருந்து திரும்பி வருவேன் என்பது நிச்சயமில்லை. போர்க் களத்தில் மடிகிறவர்கள் வீர சொர்க்கம் அடைகிறார்கள் என்று புராணங்கள் சொல்லுகின்றன. ஆனால், நான் வீர சொர்க்கம் போக மாட்டேன்.

இறந்த பிறகும் என்னுடைய ஆன்மா இந்த சோழநாட்டு வயல்வெளிகளிலும் கோயில் குளங்களிலும், நதிக் கரைகளிலும் தான் உலாவிக் கொண்டிருக்கும். அப்போது பார்த்திபன் மகனால் சோழர்குலம் பெருமை யடைந்தது என்று மக்கள் கூறுவர். அதைவிட ஆனந்த மளிப்பது வேறொன்று மிராது. எனக்கு நீ செய்யவேண்டிய ஈமக்கடன் இதுதான். செய்வாயா விக்கிரமா?

செய்வேன் அப்பா... சத்தியமாகச் செய்வேன்.

பொன்னா! எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தாயல்லவா? இளவரசரிடம் உண்மையான அன்புள்ள சிலராவது அவருக்குத் துணையாக இருக்க வேண்டாமா?