பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 97

சிவ:

பார்:

வீரமுமே பெரியவை என்று அவனுக்குப் போதிக்க வேண்டும். ஸ்வாமி! இந்த மனோரதத்தை நிறைவேற்றுவீர்களா? நிறைவேற்றுவீர்களா? நிறைவேற்றுகிறேன், உயிரோடிருந்தால்! ஆஹா... என் பாக்கியமே பாக்கியம்! இனி எனக்கு ஒரு குறையுமில்லை... ஆனால்... ஆனால்... தாங்கள் யார் ஸ்வாமி...?

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுமா? ஆம், ஸ்வாமி. இதோ பார்!.

தாடியை நீக்கிக் காட்ட ஆச்சரியத்துடன் பார்த்துத்

திடுக்கிடுகிறார் பார்த்திய மன்னர்.

பார்:

ஆ. தாங்களா?

பார்த்துக் கொண்டிருந்தவர் அப்படியே கண்களை மூட,

தலை சாய்ந்து உயிர் பிரிகிறது. ஒரு கணம் வேதனை பிரதிபலிக்கிறது.

சிவனடியார் அருள்மொழி தேவியைச் சந்திக்கிறார்.

அருள். இப்படி அமருங்கள் ஸ்வாமி! தாங்கள் யாரோ?

சிவ:

அம்பலத்தாடும் பெருமானின் அடியார்க்கு அடியவன் நான். வெண்ணாத்தங்கரைப் போரில் வீழ்ந்துவிட்ட உன் கணவரின் வீரச் செயல்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அப்பேர்ப்பட்ட வீரரைத் தரிசிக்க வேண்டு மென்று சென்றேன். தரிசித்தேன்.