பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விலகி நன்னெறி வாழ வழிகாட்டும் ஒளிவிளக்கு இந்தக் கீதை. இராமன் சூரிய மரபினன்; தேய்வு இல்லாத புகழ் அந்த வாழ்க்கையின் சிறப்பு: அதற்கு இது உருவகம். பாரதக்கதை இதன் கதாநாயகன் தீயவன்; துரியோதனன்; அவன் தேய்ந்த வாழ்க்கை; சரிந்து விட்டநிலை; இதன் உருவகம் அவன் சந்திர குலத்தவன் என்ற அறிமுகம். குரு என்பவன் இந்தக் குலத்து முதல்வன்; அவன் மரபினர் கவுரவர் எனப்பட்டனர்; குரு என்பதன் திரிபே கவுரவர் என்பது. கவுரவர் என்ற பெயர் திருதராட்டிரன் மரபினர்க்கு நிலைத்துவிட்டது.