பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடமையைச் செய்; அதற்கு முன் எது கடமை என்று உறுதி செய்துகொள். அதை அறிந்து தெரிவதற்கு வேண்டிய மனநிலை பற்றற்று எதையும் பார்ப்பது'. இன்று இந்த உபதேசம் நாட்டுக்குத் தேவைப்படுகிறது. பந்த பாசம் சொந்தம் என்று ஒருசிலர் பதவிகளில் உள்ளவர் சொந்த நலம் கருதிப் பொது நன்மைகளைப் பாழ்படுத்துகின்றனர்; அது தவிர்க்கத் தக்கது. கீதை பொன்மொழி காந்தியின் நன்மொழி: அவருக்கு இது வழிகாட்டி. இது உபதேசித்த ஞானி கண்ணன். வாழ்க்கையை நன்கு உணர்ந்து தீநெறி