பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ வேண்டும்; இது போதாது; புத்திசாலியாகவும் செயல்படவேண்டும்; அதுதான் கண்ணன். நல்லவனாக வாழ்ந்தவன் தருமன்; வல்லவன் அருச்சுனன்; அறிஞன் கண்ணன். கண்ணன் வாழ்க்கைக்கு வழிகாட்டி பாண்டவர் துணைவன்; நன்மைக்குத் துணை செய்தவன். அவன் வழங்கிய கீதை நன்மொழி வாழ்க்கை உபதேசம். 'கடமையைச் செய். பலனைக் கணக்கிட்டுக் கொண்டு இருக்காதே. ஒவ்வொன்றுக்கும் இலாப நஷ்டக் கணக்குப் பார்ப்பவர் வணிகச் சிந்தையர்,