பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 'அடிமைகளுக்கு அலங்கரிக்க மேலாடை ஏன்?" என்று கொக்கரித்தான். உடுத்துக் களையாத உத்தரியத்தை அவர்கள் எடுத்துப் போட்டனர். அவர்கள் உடலில் ஏறி இருந்த காழ்ப்புகள் மவுனம் சாதித்தன; அவை பழைய சரித்திரத்தின் ஏடுகளாகக் கோடிட்டுக் காட்டின. தேர் ஒட்டி பிராதிகாமி நேர் ஒட்டமாக ஓடினான். சிந்தித்துப் பார்த்தான்; சட்ட நுணுக்கங்கள் அவன் கண்முன் சதிர் ஆடின. 'தருமன் முதலில் தன்னைத் தோற்றுவிட்டுப் பின் மின்னை வைத்து விளையாடினானா? அவளைத் தோற்று விட்டுப் பிறகு தன்னை அடகு வைத்தானா?” இந்தச் சிந்தனை அவனைத் துளைத்தது; அந்த வினாவை அவள் கேட்டு அனுப்பியதாகத் திரும்பி வந்து செவியில் ஒதினான். "சட்டியில் உள்ளதை எடுத்துவா என்றால்