பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 என்பது சட்டப்படி செல்லாது. சடங்கின்படி ஐவருக்கும் உரியவள், அவள் குடும்பசொத்து: இவனுக்கு விற்கவோ அடிமையாக்கவோ பராதீனம் செய்யவோ உரிமை ஏது? கட்டிய மனைவியை 'ஒட்டு' என்று கூறி நாற்சதுரப் பலகையில் அவன் கட்டி விட்டான்; தருமம் பேசியவன் அவனே நெறி தவறினான், யானைக்கும் அடி சறுக்கும்; நீதி தேவனே நித்திரை கொண்டுவிட்டான். சூதில் அவளை வைத்து இழந்தான்; வைத்து இழந்தபின் அவள் யாருக்குச் சொந்தம்? ஆட்டம் முடிந்தது: 'ஆரணங்கினைக் கொணர்க' என்று தேரோட்டியை அனுப்பினான்.