பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 "பொறு" என்று அவர்களை ஆற்றினான்; நெறி தவறினான். பெண்ணைப் பணயம் வைத்தான் அறிவுக் கண்ணை இழந்தான். 'அன்று பெண் ஆணுக்கு அடக்கம்: அடிமை; அவன் உடமை' என்ற கருத்து நிலவியது. 'மனைவி என்பவள் வாழ்க்கைத் துணைவி' என்று வற்புறுத்திக் கூறியவர் வள்ளுவர். ‘வாழ்க்கைத் துணை நலம்' என்பதுதான் அவர் தந்த தலைப்பு. யாருக்கு யார் அடிமை? அது அறிவின் மிடிமை; மனைவி அவள் சுதந்திர தேவி, அவளுக்கு விலங்கு இட இவனுக்கு ஏது உரிமை? அப்படியும், "அவள் தருமனின் மனைவியே'