பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 ஒன்றும் இல்லாவிட்டால் உடல் உழைப்பு: அதுபோதும்; நடத்தலாம் பிழைப்பு அதுவும் இழைத்தான் இழப்பு. தம்பியர் நால்வர் கொத்தடிமைக்கு அவர்களை ஒட்டு வைத்தான். கூண்டுக்குள் புலிகள் அகப்பட்டுச் சிக்கிக் கொண்டன; அவை வெளியேற இயலாது. கைதட்டிச் சிரித்தான்; 'பொருள் ஏதும் இல்லையோ' என்று எள்ளி நகைத்தான்; மிகைத்தான்; தருமன் விழித்தான். 'உன் மனைவியை ஒட்டு வை இழந்த பொருள் அனைத்தும் அதற்கு ஈடு' என்றான். வீடுமன் தடுத்தான்; விதுரன் கடுஞ்சொல் விடுத்தான் விசயன் வில்லை எடுத்தான்; வீமன் கதையை எடுத்தான்; தம்பியர் இருவரும் துடித்தனர்.