பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 எதிர்ப்புகள் தம் பக்கம் மிகுதியாக வரத் தருமன் நிலைமறந்தான்; ஆதிக்கம் ஓங்கியது. வட்டு ஆடும் பலகை, அதில் உருட்டி விடும் காய்கள்; அவற்றின் சலசலப்பில் தன்னை மறந்தான், அறம் துறந்தான். ஒட்டு என்று வைத்தான், பட்டு என்று அதுபோயது: தூண்டில் முள் புழு அதைத் தின்ன வரும் மீன் அதிலிருந்து தப்பியது இல்லை. இழக்கும் தோறும் இழுத்துப் பிடிக்கும் குது. அது தீது, 'இழந்தவற்றை ஒரே ஆட்டத்தில் மீட்டுப் பெற்று விடலாம்" என்ற வேகம். அழிந்தது அவன் விவேகம். வீடு, மனை, நாடு ஆட்சி அனைத்தும் துறந்தான்;