பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 வகுக்கப் போகிறார்கள்?" என்று வில் உண்டாக்கும் வடுவினைச் சொல்லில் உண்டாக்கினான் கன்னன்; சூரியன் மகன் சூரியா. 'ஆடுவதற்கு வட்டம் அத்தினாபுரியையே வைக்கிறேன்' என்றான் திரெளபதியின் வத்திரம் கவரக் கருதிய கயவன்; கண்ணிலான் மகன். அவன் நோக்கமே நாடு அன்று, பொருள் அன்று: அவர்களை அவையில் நிறுத்தி வைத்து இகழ்ந்து பேசுதல். அருச்சுனன் அறிவுரை கூற முனைந்தான்; அடக்கம் காரணமாக அமைதியாயினான்; வீமன் உருத்து எழுந்தான்; தருமன் கருத்து அறிந்து, 'விதி இது' என்று கைகட்டிக் கொண்டான்.