பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 எளிமைப்படவில்லை; வீரம் தலை எடுத்தது. இரண்டு உந்தல்கள்: தன்னைக் கோழை என்பதை அவனால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை; மற்றும் ஏழை என்ற இகழ்வுரை அவனைத் தூண்டிவிட்டது. பொய்யான மானம்; மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்? நினைப்பார்கள்? இதற்காகவே வாழ்ந்து கெடுபவர் பலர்; நல்லது கெட்டது என்ற சிந்தனை அவர்களை விட்டு அகல்கிறது. 'காயை உருட்டத் தெரியாதவர் வில் சாய்த்து நாண் எங்கே பூட்டப் போகிறார்கள்? காய் எடுத்து நகர்த்தத் தெரியாதவர் கரி, பரி, தேர், ஆள் இவர்களை எப்படி