பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 அவளை அவிழ்த்து அசிங்கப்படுத்துவது என்று முடிவு செய்தான்; துச்சாதனனை அழைத்தான். 'அவளைத் துகில் உரித்துக் காட்டு அப்பொழுது எழும் அழுகுரல் பாட்டு: இந்த அவையோர்க்கு எடுத்துக்காட்டு; அதற்காக அவளை வாட்டு' என்று ஆணையிட்டான். 'ஐவருக்கு அவள் ஒருத்தி, ஏன்? இந்தச் சபையோருக்கும் அவளை உரிமையாக்கு' என்று வரம்பு மீறினான். அவள் கண்களில் நெருப்புப் பொறி பறந்தது: 'பொறுப்பற்றவனே எது உண்மை? எது உயர்வு என்பது அறியாத மூடன் நீ; "ஒரு பெண் ஒருவனுக்குத் தான் என்று கூறுவது சம்பிரதாயம்; அது பொது நெறி; நன்னெறியும் ஆகும்.