பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 யாருக்கும் உரிமை இல்லை; விளக்கம் தரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நல்லது கெட்டது என்பது அது மற்றவர்களை எப்படிப் பாதிக்கிறது. அதை ஒட்டித்தான் முடிவு செய்யப்படும் சமுதாயச் சுரண்டல்: அவன்தான் குற்றவாளி, வலிய ஒரு பெண்ணைக் கெடுப்பவன்; அவன் மிருகத்துக்கு நிகர்.' உரைபல நிகழ்த்தினாள் அவள் ஆவேசம் அடங்கியது. துச்சாதனன் நெருங்கினான் அவள் தந்நிலை இழந்தாள் செயல் இழந்து உழந்தாள் இன்று மனிதர்கள் நம்பிக்கையோடு வாழ்கிறார்கள் என்றால் அதற்குத் துணையாக இருப்பது இறைநம்பிக்கை அதை அவள் பற்றாகக் கொண்டாள்