பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 'இறைவா! நீ என் நிறையைக் காப்பாற்று' என்று கதறி அழுதாள் அவள் கண்களில் நீர் அருவியாகியது; சினம் சீற்றம் மறந்து அழுகையில் முடிந்தது. அவள் வேறு ஓர் சொல்லும் சொல்ல இயலவில்லை; கோவிந்தன் பெயர் அவளுக்கு வந்தது: கோவர்த்தன கிரி எடுத்துப் பசுக்களைக் காத்தவன் கோவிந்தன். நச்சுப் பொய்கையில் நாகம் மீது நர்த்தன மாடியவன் அந்தத் தெய்வம். அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவள் இறைவன் அதை ஒதியவளாய்ச் செயல் இழந்தாள்;