பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 இருகரம் கூப்பித் தொழுதாள்; அவையினர் பதறிப் போனார்கள். மாயையில் மங்கிக் கிடந்தவர் ஒளிபெற்றனர்; அவரவர் மனச்சான்று தட்டி எழுப்பப்பட்டது. சேலையைக் கைப்பிடித்த துச்சாதனன் தளர்ந்தான்; அவன் நெஞ்சை தெய்வப் பெயர் சுட்டது; அவனைத் திருத்தியது தீமைக்கு அது மருந்து ஆகியது. அவனால் தவறு தொடர்ந்து செய்ய இயலவில்லை; தெய்வத்தின்முன் மனித ஆணை செயலற்று விட்டது: சேலையை இழுத்தான்; ஆனால் அவன் கைகள் நடுங்கின; தளர்ந்து சாய்ந்தன; இந்த இறை உணர்வு தீயவனைத் திருத்துகிறது நல்லவர்களைத் தட்டி எழுப்புகிறது.