பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 நலிந்தவர்க்கு நம்பிக்கை தந்து காத்தது. இருட்டு அறையில் மின்சார விளக்கு பளிச்சிடுவது போல் அவர்கள் உள்ளொளி அவர்களைத் தட்டி எழுப்பியது. துரியன் செயல் இழந்தான்; அவன் வாயடங்கியது: மக்கள் தீர்ப்பு அவனுக்கு மாறாக நின்றது: சிதைந்து இருந்தவர்கள் ஒன்று பட்டார்கள்; அந்த ஒற்றுமையை நிறுவியது அவள் ஒலக்குரல்: இறை அச்சம் நன்மையின் வெற்றி: தெய்வம் அதற்கு அஞ்சி அனைவரும் மனம் மாறினர்; தவறு உணர்ந்து செயலாற்றினர். தெய்வக் கற்பினாள் அவள் மானம் தப்பியது; கண்களில் நீர் நின்றது: