பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 சினந்தாள்; எரியிட்டுக் கொளுத்த அழல் அவள் கண்களில் வெளிப்பட்டது. இனி தீமை தலையெடுத்து வாழ முடியாது; ஒட்டு மொத்தமாக எதிர்ப்புக் கிளம்பியது. துரியன் கொட்டம் அடங்கியது. பாண்டவர்கள் விடுபட்டால் இவர்கள் தவிடுபொடி ஆவது உறுதி. திருதராட்டிரன் தன் மகன் நல்வாழ்வுக்கு அஞ்சினான்; அவன் முன் நின்று பேசினான் கட்டவிழ்த்து அவர்களை விடுதலை செய்ய ஏவினான் திரெளபதி அவள் அவர்கள் தரும் விடுதலையை விரும்பவில்லை. "பழிக்குப் பழி வாங்குவது அதுதான் தக்க பாடம் என்று கருத்துக் கொண்டாள்.