பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 சூதில் அவளுக்கு நம்பிக்கை இல்லை; தருமத்தை அவள் நம்பினாள்; அந்த தருமத்தைப் பணயம் வைத்து மறு சூது ஆடும்படி கணவனைத் தூண்டினாள்; அவனால் மீறமுடியவில்லை. முள்ளை முள்ளால்தான் களைய முடியும்; 'சூதில் இழந்த உரிமையை அதே சூதால் பெறுவது' என்று முடிவு செய்தாள். சகுனி நடுங்கினான்; சூழ்ச்சிகள் பொய்மைகள் நிலைத்து நிற்பவை அல்ல; தருமம் வெற்றி கொள்ளும்; இறுதி வெற்றி அவர்களுக்குத் தான்; அதற்கு அஞ்சினான். வேறுவழி இல்லை; மறுசூதாட்டம் தொடங்கியது. உருட்டிய காய் சகுனியை வெருட்டியது. வெற்றி பாண்டவர்க்கே கிட்டியது; விடுதலை பெற்றனர்.