பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 அவிழ்த்து விட்ட சிங்கங்கள் அவற்றின் சீற்றத்துக்கு அஞ்சினர்; அவர்கள் ஆண்மைக்கு நடுங்கினர், தருமன் பாண்டவர்தம் தலைவன், அறச் செம்மல்; ஆவேசப்படவில்லை; நெறி பிறழவில்லை. மலை குலைந்தாலும் நிலைகுலையாத மனத்தினன்; அலை என எழுந்த தம்பியரின் தருக்கை அவர்கள் வேகத்தை அவன் அடக்கவில்லை. திரெளபதி துரியனை எதிர்த்து நோக்கினாள்; அவனைத் துச்சமாக மதித்தாள் வாய்ப்புக் கிடைத்திருந்தால் அவன் மீது பாய்ந்து குருதி கொப்புளிக்க அவன் மார்பைப் பிளந்து அவனை வீழ்த்தி இருப்பாள். வலிமை மிக்க வயவேந்தர் தம் கணவர்; படைகொண்டு தாக்கி விடைதர முடியும்.