பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 எப்படியும் இழந்த நாட்டைப் பெற வேண்டும்; சூதாடித் தமக்கு விடுதலை தேடிக் கொண்டனர். நாடு, வீடு, சொத்து அவர்கள் கையகத்து உள்ளது; அவற்றை மீண்டும் பெறச் சூதாட வேண்டும்; அல்லது போரிட்டுத் திரும்பப் பெறவேண்டும். காலம் இடம், வலிமை மூன்றும் சேர்ந்தால்தான் போரில் வெற்றி பெறமுடியும். இது குழாய்ச் சண்டை அல்ல; சொற்களைக் கொட்டிச் சுற்றுப்புறத்தைக் கெடுக்க, நாலுபேர் வந்து நகைக்க குடுமிபிடி சண்டை அல்ல; அந்தக் கெடுபிடிக்கு அங்கு அவசியம் இல்லை. அரசர்கள் மோதிக் கொள்ளும் பெரும்போர்; அதற்கு அவகாசம் தேவை; வலிமை உடையவர் சகவாசம் தேவை;