பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 வெளியே சென்றால் தங்க வீடு, தொழில், வாழ்க்கை இந்த வினாக்களுக்கு விடை தெரியவில்லை. இவர்களை வெளியே விட்டால் கவுரவர் தம் எதிர்காலம் அது கேள்விக்குறியாகி விடும். வயப்புலியை வால் உருவி விட்டால் அது சீறாது என்பதில் என்ன உறுதி? 'தீயினால் சுட்டபுண், ஆறாதே வாயினால் சுட்டவடு' இது வள்ளுவர் மொழி, துரியனைப் பற்றிய கவலை தந்தை திருதராட்டிரனுக்கு வாட்டியது. எப்படியும் அவர்கள் நாட்டைத் திருப்பித் தந்துதான் ஆகவேண்டும்; அது எப்பொழுது என்பதுதான் கேள்வி, காலம் தேவை.