பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 ஆண்டுகள் சில கழிந்தால் வடு ஆற வழியுள்ளது. சீற்றம் குறையும். என்ன செய்யலாம்? "அவர்களைக் காட்டுக்கு அனுப்புவது; அங்குச் சிலகாலம் வாழச் செய்வது: அதன்பின் அவர்களை முடக்கி வைப்பது: அதற்கு ஓர் ஆண்டு' என ஒரு திட்டம் உதயம் ஆகியது. இதன் அடிப்படை யாது? அந்தக் காலத்தில் நாடு கடத்தல் என்பது ஒரு சூழ்ச்சியாக இருந்தது. இராமனைக் கைகேயி பதினான்கு வருடம் நாடு கடத்தி வைத்தாள். அதே போல இவர்களுக்கும் சிக்கல் ஏதாவது ஏற்படுத்தினால் சிக்கி அழிவார்கள் என்று கணக்குப் போட்டார்கள்.