பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கங்கைக் கரையில் அழகிய நங்கையைக் கண்டான்; அவளைத் தொடர்ந்து சந்தித்தான். அந்தச் சந்திப்புக்குத்தான் காதல் என்றுபெயர். காதல் என்பது சாதியைக் கடந்தது; மன்னர்குலத்து மகளைப் பேசி மணம் முடிப்பது காதல் ஆகாது; அது வாழ்க்கை ஒப்பந்தம். பெற்றவர் இருந்து அவர் முன் இருந்து ஒப்புதல் தெரிவித்து ஏற்படுத்தும் அரசு உறவுமுறை: இதற்கு அடிப்படை அரச வாழ்வு நிலை. சந்தனு இந்தக் கட்டுக்குள் அடங்காமல் 'அவள் யார்? ஊர் எது? பெற்றோர் யார்?" என்றெல்லாம் கேளாமல் அவளை மணக்க முன் வந்தான். அவள் புதுமைப் பெண்; தனக்கு என்று சில கோட்பாடுகள் அவள் வைத்திருந்தாள்; "அதை விட்டுக் கொடுக்க முடியாது' என்று அவனைக் கட்டுப் படுத்தினாள்.