பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 அவள் அவனுக்குத் தேவைப்பட்டாள்; எதிர் பேசாமல் அவளை ஏற்றுக் கொண்டான். பூவாகிக் காயாகிக் கனிந்தன குழந்தைகள், அவற்றை ஏன் அவள் கங்கையில் எறிந்தாள்? புரியாத புதிர். பிறந்தவை ஏழு அவள் நல்லதங்காளாக அவற்றை நீரில் எறிந்தாள். இவன் 'ஏன்? எது?' என்று கேள்வியே கேட்கவில்லை; சமய வாதிகளுக்கு அஞ்சிப் பலர் வாய்திறப்பது இல்லை; அதுபோன்று இருந்தது அவன் மனநிலை. பெற்றவன் அவன்; சுமந்தது அவள். தாய்மை என்பது அவளுக்கு உரியது: ஏன் எதற்காக என்று இவன் வினா எழுப்பவில்லை; கட்டுக்கு அடங்கி விட்டுக் கொடுத்தான்.