பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 எட்டாவது கண்ணன் பிறந்தான்; அது பாகவதக் கதை. வீடுமன் கங்கைக்கு எட்டாவது குழந்தை; கொழு கொழு என்று இருந்த மகன்; அவனைக் கண்டதும் சந்தனு ஒருபடி உயர்ந்து விட்டான். 'தவறு செய்தால் கண்டிக்காமல் இருப்பது கோழைத்தனம்' என்பதை உணர்ந்து செயல்பட்டான் அவள் உறவு முறிவுக்கு அவன் அஞ்சவில்லை; மகன் அவனுக்குத் தேவைப்பட்டான். அவளும் அவனை மதிக்கத் தொடங்கினாள்; பாசம் என்பது காதலை விட உயர்ந்தது; காதல் தொடக்கம்; பாசம் முடிவு: அதற்கு அவள் மதிப்புத் தந்தாள். ஒன்றே ஒன்று அவள் அவனைக் கேட்டுக்