பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 கொண்டாள்; 'அவனை வளர்த்து வாலிபனாக ஆக்கத் தன்னிடமே விடுக' எனக் கேட்டுக் கொண்டாள்; அவனும் சம்மதித்து விடைதந்தான். பரிமளகந்தியை மணத்தல் கங்கையை அவனால் மறக்க முடியவில்லை; அதில் குளித்து அவனுக்குப் பழக்கம்; அந்த மகிழ்ச்சி அவனை விட்டு நீங்கவில்லை. அவள் நினைவாக அந்தக் கங்கைக்கரையில் சுற்றித் திரிந்து உலவி வந்தான் அங்கே வளர்ந்த மகன் வீடுமன் வரவு கண்டான்; அவன்தான் தன்மகன் என்பது அறிந்து கொண்டான். அவனைப் பாசத்தால் தழுவிக் கொண்டான் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். கங்கை என்ன ஆனாள்? எங்கே சென்றாள்? அது முடிந்த கதை ஆகியது.